dinamalar telegram
Advertisement

வாவ் சொல்ல வைக்கிறார் இந்த வாரணாசி மாணவர்!: பத்தாம் வகுப்பில் முதலிடம்; தமிழ் பாடத்தில் அபாரம்

ADVERTISEMENT
தொண்டாமுத்தூர்: உத்தரபிரதேச மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட, ஒரு மாணவர் கடந்தாண்டு தமிழகத்தில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

தொண்டாமுத்தூர் அடுத்த புதுப்பாளையத்தில், கடந்த பத்தாண்டுகளாக வசித்து வரும், ரவிசங்கர்,50 - செண்பாதேவி, 43. தம்பதியருக்கு நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் உ.பி., மாநிலம், வாரணாசியை பூர்வீகமாக கொண்டவர்கள். ரவிசங்கர் புதுப்பாளையத்தில், கவரிங் வளையல் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ரிஷப்குமார், தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்தாண்டு, பிளஸ் 1 படித்து வருகிறார். இவர் கடந்தாண்டு, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 461 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதலிடம் பிடித்தார். தமிழ் பாடத்தில், 87 மதிப்பெண்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வடமாநிலத்தை சேர்ந்த மாணவன், தமிழில் படித்து, பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று, தன் திறமையை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். இவரை, பலதரப்பினரும் பாராட்டி பரிசு வழங்கி வருகின்றனர்.


மாணவன் ரிஷப்குமார் கூறுகையில், "ஒன்றாம் வகுப்பை வாரணாசியில் படித்தேன். தந்தையின் பணி காரணமாக, கோவைக்கு வந்தோம். தீனம்பாளையத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில், இரண்டாம் வகுப்பில் சேர்ந்தேன். அப்போது எனக்கு, ஹிந்தி மட்டுமே தெரியும். தமிழ், பேசுவதை புரிந்து கொள்வதே சிரமமாக இருந்தது. அதன்பின், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் வீட்டின் அருகில் உள்ளவர்களின் உதவியால், தமிழ் பேச, எழுத, படிக்க கற்றுக்கொண்டேன். தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 6ம் வகுப்பு சேர்ந்தேன். இங்கும் ஆசிரியர்கள் எனக்கு வழிகாட்டியாக இருந்தனர். தவறில்லாமல் தமிழை எழுத, படிக்க, நிறைய தமிழ் புத்தகங்களை வாசித்தேன். தற்போதும் வாசித்து வருகிறேன். தொன்மையான தமிழ் மொழியை கற்றறிந்ததில், மிகவும் பெருமையாக உள்ளது. எதிர்காலத்தில், தகவல் தொழில்நுட்பத்துறையில், சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசை," என்றார்.

தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரேமா கூறுகையில்," ரிஷப்குமார், எங்கள் பள்ளி மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன். ஆசிரியர்கள் கற்று கொடுத்தாலும், அதை உள்வாங்கி, தனது தொடர் முயற்சியால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றார். இதனால், பள்ளிக்கும் பெருமை சேர்ந்துள்ளது. இம்மாணவனை போல், அனைத்து மாணவர்களும், தங்களது திறமையை சரியான முறையில், வெளிப்படுத்த வேண்டும்,"என்றார்.

ரிஷப் குமார், வகுப்பில் பாடம் நடத்தும் போதே, தனக்கு ஏற்படும் சந்தேகங்களை, உடனுக்குடன் கேட்டறிந்து தெளிவுபடுத்திக்கொள்வான். அதே போல, ஆர்வமுடனும், முழு ஈடுபாட்டுடனும் படித்து வந்தான். என் மாணவன் சிறந்து விளங்குவது, நான் பல விருதுகளை பெற்றது போலமகிழ்ச்சியாக உள்ளது.

-அருணகிரி, வகுப்பாசிரியர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

  • duruvasar - indraprastham,இந்தியா

    ரங்கராஜ் பாண்டே பீகாரை பூர்வீகமாக கொண்டவர். ஸ்டாலின் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர். ஈ வி எஸ் இளங்கோவன் கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டவர்.

    • Dharmavaan - Chennai,இந்தியா

      துண்டு சீட்டுக்கு தமிழ் ஒழுங்காக தெரியுமா.

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    பீடா வாயர்கள் திறமைசாலிகள் என்பதை த்ராவிஷம் ஏற்றுக் கொள்ளாது. வாங்கிய மதிப்பெண்ணா வழங்கிய மதிப்பெண்ணா என்பது விவாதத்துக்கு உரியது.

    • வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்

      ....

Advertisement