dinamalar telegram
Advertisement

மகனுக்கு தந்தையின் சொத்து ஆர்.டி.ஓ., உத்தரவால் பத்திரம் ரத்து

தஞ்சாவூர்:கும்பகோணத்தில், உணவு அளிக்காமல் கொடுமைப்படுத்திய மகனுக்கு, தந்தை எழுதிக்கொடுத்த சொத்து பத்திரங்களை ரத்து செய்து, ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருநாகேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம்,72. இவரது மகன் வைத்திலிங்கம். மனைவி இறந்து விட்டதால் தனியாக இருந்த சண்முகத்தை நன்றாக பராமரிப்பதாகக் கூறி, வைத்திலிங்கமும், அவரது மனைவியும், சொத்துக்களை வைத்திலிங்கம் பெயரில் பதிவு செய்து கொண்டனர்.

சொத்துகளை தன் பெயருக்கு மாற்றிய சில நாட்களுக்கு பின், தந்தை சண்முகத்தை மகன் பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி உள்ளார். மகனும், மருமகளும் கொடுமைப்படுத்துவது பற்றி, 2021ல் சண்முகம், கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட கும்பகோணம் ஆர்.டி.ஓ., லதா, நேற்று, மகன் வைத்திலிங்கத்துக்கு சண்முகம் பத்திரப்பதிவு செய்து கொடுத்த சொத்துக்கள் அனைத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement