அதிகாரிகளை சிறை பிடித்த கிராம மக்கள்
திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த மெய்யூர் பஞ்., தலைவராக கோவிந்தன் உள்ளார்.
கடந்த, மே 1ல் தொழிலாளர் தினத்தையொட்டி நடந்த கிராம சபை கூட்டத்தின்போது, கிராமத்தின் அடிப்படை தேவைகள் குறித்து, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஆனால், அதில் ஒன்றை கூட அதிகாரிகள் நிறைவேற்றவில்லை.
கடந்த, மே 1ல் தொழிலாளர் தினத்தையொட்டி நடந்த கிராம சபை கூட்டத்தின்போது, கிராமத்தின் அடிப்படை தேவைகள் குறித்து, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஆனால், அதில் ஒன்றை கூட அதிகாரிகள் நிறைவேற்றவில்லை.
இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி நடந்த கிராம சபா கூட்டத்தின் போது நிறைவேற்றப் பட்ட முந்தைய தீர்மானங்களின் நிலை குறித்து கிராம மக்கள் கேட்டனர்.அதற்கு அதிகாரிகள், 'இப்போதைய பிரச்னைகள் மட்டும் பேசுங்கள்' என கூறினர். ஆத்திரமடைந்த கிராம மக்கள், அதிகாரிகளை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த திருவண்ணாமலை தாசில்தார் சுரேஷ், பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் சரண்யாதேவி மற்றும் வாணாபுரம் போலீசார் மக்களிடம் பேச்சு நடத்தினர்.'அடுத்தக் கூட்ட த்தில் அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்து கொள்வர். அப்போது மக்கள் கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்படும்' என உறுதி அளித்தனர்.சமாதானமடைந்த மக்கள், அன்றிரவு, 7:30 மணி வரை பிடித்து வைத்திருந்த அதிகாரிகளை விடுவித்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!