dinamalar telegram
Advertisement

மத நல்லிணக்க விருந்து பெரம்பலூரில் விமரிசை

பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்ட நிர்வாகம் சார்பில், வி.களத்துார் ஹிந்து, -முஸ்லிம் பிரமுகர்களுக்கு, நல்லிணக்க விருந்து வைக்கப்பட்டது.

பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே, வி.களத்துாரில் ஹிந்து, முஸ்லிம் சமூகத்தினரிடையே கடந்த 127 ஆண்டுகளாக பிரச்னை இருந்தது.நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், பெரம்பலுார் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, எஸ்.பி., மணி மற்றும் அரசு அலுவலர்கள் நடத்திய அமைதி பேச்சு அடிப்படையிலும், பிரச்னைக்கு சுமுக தீர்வு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, மத நல்லிணக்கத்தை நிலைநாட்டும் வகையில், ஹிந்து மற்றும் முஸ்லிம் சமுதாயத்தினர் இணைந்து, கடந்த மாதம் 30ம் தேதி, வி.களத்துாரில் உள்ள செல்லியம்மன் கோவில் திருவிழாவை சிறப்பாக நடத்தினர்.

இதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், ஹிந்து மற்றும் முஸ்லிம் சமுதாய பிரமுகர்களுக்கு, பெரம்பலுாரில் உள்ள தனியார் ஹோட்டலில், மாவட்ட நிர்வாகம் சார்பில், நேற்று முன்தினம் இரவு, மத நல்லிணக்க விருந்து வைக்கப்பட்டது.இதில், பெரம்பலுார் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, எஸ்.பி., மணி, வி.களத்துாரை சேர்ந்த ஹிந்து, முஸ்லிம் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement