dinamalar telegram
Advertisement

நடை மேம்பாலம் திறப்பு



சென்னை, சென்னை, அண்ணா நகர் மண்டலம் 100வது வார்டுக்கு உட்பட்ட, கும்மாளம்மன் கோவில் தெருவில், மத்திய சென்னை எம்.பி., மேம்பாட்டு நிதியின் கீழ், 1.23 கோடி ரூபாய் மதிப்பில் சமுதாய நலக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.இதற்கு, ஒருநாள் வாடகையாக 8,800 ரூபாய்; அரை நாள் வாடகையாக 4,400 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சமுதாய நலக்கூடத்தை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.அதேபோல், நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையின் குறுக்கே, தெற்கு பகுதியில் உள்ள ரயில்வே நடை மேம்பாலத்தை சுடுகாடு அணுகுசாலையுடன் இணைக்கும் வகையில், 6.17 கோடி ரூபாய் மதிப்பில் 24.6 மீ., நீளம், 5 மீ., அகலத்தில் இரும்பாலான நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த நடைமேம்பால பணிக்கு 5.42 கோடி ரூபாய் மூலதன மானிய நிதியில் இருந்தும், 75 லட்சம் ரூபாய் மத்திய சென்னை எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தும் பெறப்பட்டு, பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.இதை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் பிரியா, எம்.பி., தயாநிதி மாறன், எம்.எல்.ஏ.,க்கள் எழிலன், மோகன், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement