dinamalar telegram
Advertisement

16 வயது சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

பெரம்பலுார்:அரியலுார் அருகே, 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு, மகளிர் நீதிமன்றத்தில், 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அரியலுார் அண்ணா நகரை சேர்ந்தவர் கார்த்திக், 27. கூலித் தொழிலாளியான இவர், கடந்த ஆண்டு எருத்துக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

சிறுமியின் தந்தை அளித்த புகார்படி, அரியலுார் அனைத்து மகளிர் போலீசார், கார்த்திக்கை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.அரியலுார் மகளிர் நீதின்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், நேற்று தீர்ப்பளித்தார்.அதில், 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அதன் பின், கார்த்திக், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement