dinamalar telegram
Advertisement

செஸ் விளையாடும் விநாயகர் தயார்

ADVERTISEMENT
புதுக்கோட்டை:விநாயகர் சதுர்த்தியன்று பிரதிஷ்டை செய்வதற்காக, ஆலங்குடி அருகே, துவரடிமனை பகுதியில், 'செஸ்' விளையாடும் விநாயகர் சிலைகள் தயாரித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே, துவரடிமனையில், விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக, சுற்றுச் சூழல் மாசுபடாமல் இருக்கும் வகையில், குளத்து மண், தென்னை நார், நெல் உமி மற்றும் மரம் விதைகள் கலந்து விநாயகர் சிலை தயாரிக்கப்படுகிறது.

வரும் 31-ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விற்பனைக்காக, செஸ் விளையாடும் விநாயகர் சிலை உட்பட பல வகையான புதிய வடிவில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப் படுகின்றன. களிமண்ணால் தயாரிக்கும் சிலைகளில் மரக்கன்று விதைகளை வைத்த சிலைகள், செஸ் விளையாடும் சிலைகள் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இது குறித்து, துவரடிமனையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் சங்கர் என்பவர் கூறியதாவது: துவரடிமனை பகுதியில், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், மிக கலை நயத்துடன் சிலைகள் தயாரித்து, குறைந்த விலையில் விற்பனை செய்கிறோம். தற்போது, போதிய அளவு களிமண் கிடைக்கததால், அதிக சிலைகள் தயாரிக்க முடியவில்லை, தமிழக அரசு போதிய களிமண் எடுக்க அனுமதி மற்றும் நிதி உதவி அளித்தால், பாரம்பரியமான கலைகளை, அழிவில் இருந்து காப்பாற்றலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement