காதலன் நீயா, நானா போட்டி கொலை செய்த வாலிபர் கைது
அரக்கோணம்:அரக்கோணம் அருகே இரு வாலிபர்கள் இடையே சிறுமியை காதலிக்க ஏற்பட்ட காதல் போட்டி, கொலையில் முடிந்தது. ஆத்திரத்தில் கொலை செய்த வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே, தோல்ஷாப் கிடங்கு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து, 26, பெயின்டர். கீழ்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மைக்கேல், 23, தொழிலாளி; அதே பகுதியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவியை இருவரும் காதலித்துள்ளனர். இதனால், சிறுமியை காதலிப்பது நீயா, நானா என, வாலிபர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில், இரு நாட்களுக்கு முன், கீழ்குப்பம் இந்திரா நகரில், இருவரும் குடிபோதையில் காதல் விவகாரம் குறித்து தகராறில் ஈடுபட்டனர்.இதில்,ஆத்திரமடைந்த மைக்கேல் கத்தியால் குத்தியதில் மாரிமுத்து இறந்தார். சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த அரக்கோணம் போலீசார் மைக்கேலை கைது செய்து, அரக்கோணம் சிறையில் அடைத்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!