தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு
திருவண்ணாமலை:தேசிய நெடுஞ்சாலையில், சுங்கச்சாவடி அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை அருகே, கடலுார் - சித்துார் தேசிய நெடுஞ்சாலையில், வேங்கிக்கால் ரிங் ரோட்டிலிருந்து, 1 கி.மீ.,யில், சத்திரம் கிராமத்தில் புதியதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இதன் அருகில், 2 கி.மீ.,யில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம், அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் உள்ளன.

இதனால் சுங்கச்சாவடி அமைத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், பணிகளை அவசர அவசரமாக முடித்துள்ளனர்.சில நாட்களாக வாகன சோதனை ஓட்டம் நடக்கிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள், திருவண்ணாமலையில் இருந்து, 15 கி.மீ., தொலைவில் சுங்கச்சாவடியை அமைக்க வலியுறுத்தி வருகின்றனர். இந்த சுங்கச்சாவடியில், ஓரிரு நாளில் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!