ADVERTISEMENT
திருநெல்வேலி:ஆதிச்சநல்லுார் தொல்லியல் ஆய்வில், முதன்முறையாக இரண்டு மூடிகளுடன் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. உலோகங்களை பிரித்தறியும் கருவிகளுடன் ஆய்வு பணி தீவிரமடைந்து உள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி கரையில் ஆதிச்சநல்லுாரில் மத்திய தொல்லியல் துறையினர் நடத்தி வரும் அகழாய்வில், 80க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டறியப் பட்டு உள்ளன. வாழ்விட பகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சில தினங்களுக்கு முன், 3.5 செ.மீ., அளவுடைய தங்க நெற்றிப் பட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.

அதே குழியில், 9 அம்புகள், வாள், சூலம் தொங்கட்டான் உள்ளிட்ட பொருட்களும் கிடைத்தன. நேற்று முதல் முறையாக, இரண்டு மூடிகள் கொண்ட முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. முதுமக்கள் தாழிகளில் உள்ள எலும்புகளை ஆய்வு செய்ய, புனே டெக்கான் கல்லுாரி மானுடவியல் ஆய்வாளர் வீனா முன்ஷிப் வந்துள்ளார்.
இதன் வாயிலாக, எலும்புகளின் துல்லிய கால அளவீடுகள் தெரிய வரும். மேலும் உலோக பொருட்களை ஆய்வு செய்ய, கல்பாக்கம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த மூன்று பேர் குழுவினர் வந்துள்ளனர். 'லான்டா' கருவி மூலம் உலோக பொருட்களை ஆய்வு செய்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!