dinamalar telegram
Advertisement

வவ்வால்கள் துர்நாற்றம்: ஆய்வு செய்யாமல் திரும்பிய சட்டசபை மதிப்பீட்டு குழு

ADVERTISEMENT
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வரலாற்று சிப்பு மிக்க பூம்புகார் சுற்றுலா தளத்தில் சட்டசபை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்தனர். பூம்புகார் சுற்றுலா தளத்தை உலக சுற்றுலா தளத்திற்கு இணையாக மேம்படுத்துவதற்கான பணிகளை செய்திட சட்டசபை மதிப்பீட்டு குழு தலைவர் டி.ஆர். பி ராஜா தலைமையில் மதிப்பீட்டு குழு உறுப்பினர்களும்அக்ரி. கிருஷ்ணமூர்த்தி, அம்மன். அர்ஜுனன், அருள், ராமச்சந்திரன், ஈஸ்வரன், பாலசுப்ரமணியன், ராஜகுமார், செல்லூர் ராஜு, ஆகியோர் பூம்புகார் சுற்றுலா தளத்தில் உள்ள சிலப்பதிகாரக் கலைக்கூடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களுடன் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, பூம்புகார் மற்றும் சீர்காழி எம்.எல்.ஏ ஆகியோரும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிலப்பதிகாரக் கலைக்கூடத்தில் முகப்பு மற்றும் சுற்றுப்புற பகுதி முழுவதும் செடி, கொடிகள் மண்டி காடு போல் வளர்ந்திருப்பதையும், கலைக்கூடத்தில் உள்ளே கலை பொக்கிஷங்கள் உடைந்து சிதிலமடைந்து பராமரிப்பு இன்றி இருந்ததையும், அதிக அளவு வவ்வால்கள் தங்கி கடுமையான துர்நாற்றம் வீசியதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த மதிப்பீட்டு குழுவினர் சிலப்பதிகார கலைக்கூடத்தை இவ்வாறு பராமரிக்கின்றி வைத்துள்ளதற்கு சுற்றுலாத்துறை அதிகாரியை கண்டித்ததோடு கடும் துர்நாற்றத்தால் கலைக்கூடத்தின் உள்ளே சென்று ஆய்வு செய்ய முடியாமல் திரும்பினர்.மேலும் 100 நாள் வேலை திட்டத்திலாவது கலைக்கூடத்தை சுற்றி வளர்ந்துள்ள செடி கொடிகளை அகற்றி தூய்மைப்படுத்த அறிவுறுத்தினார். இந்த சம்பவத்தால் பூம்புகாரில் உள்ள பாவை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் மன்றம் உள்ளிட்ட மற்ற இடங்களை ஆய்வு செய்யாமல் மதிப்பீட்டு குழுவினர் பாதியிலேயே திரும்பி சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement