ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
பாணாவரம்: ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே, ஏரியில் மூழ்கி இரண்டு மாணவர்கள் இறந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே பழைய பாளையம் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் துரைமுருகன், 50, விவசாயி. இவர் மகன் அன்பரசன், 15. அதே பகுதியை சேர்ந்த விவசாயி கோவிந்தராஜன், 65, மகன் பிரதீஷ், 12. அன்பரசன், பிரதீஷ் ஆகிய இருவரும் பாணாவரம் அரசு பள்ளியில் படித்து வந்தனர். இவர்கள் நேற்று(ஆக.,15) மதியம் 10 மாணவர்கள் அப்பகுதியில் உள்ள ஏரியில் இறங்கி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அன்பரசன், பிரதீஷ் இருவரும் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்ற போது நீரில் மூழ்கினர். பாணாவரம் போலீசார் ஏரியில் இறங்கி தேடுதல் வேட்டை நடத்தி இரவு 10:00 மணிக்கு அன்பரசன், பிரதீஷ் ஆகியோர் சடலங்கள் மீட்டனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!