dinamalar telegram
Advertisement

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, 65 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்த தால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணியளவில் அணை நீர்மட்டம், 120 அடி, நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி.,யாக இருந்தது. வரத்தான, 85 ஆயிரம் கன அடி நீரும் அப்படியே வெளியேற்றப்பட்டது. காலை, 11:15 மணிக்கு நீர் வெளியேற்றம், 65 ஆயிரமாக கன அடியாக குறைக்கப்பட்டது. மாலை, 4:00 மணி நிலவரப்படி, 65 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து குறைந்தது. அதேசமயம் நீர் திறப்பில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. இதில், 16 கண் மதகு வழியாக, 42 ஆயிரம் கன அடி உபரி நீராக வெளியேற்றப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement