dinamalar telegram
Advertisement

குடியிருப்புகளுக்கு வராத கொடி ஓசூர் மாநகராட்சியில் ஏமாற்றம்

ஓசூர் மாநகராட்சி மூலம், இலவசமாகவும், 18 ரூபாய் விலைக்கும் விற்பனை செய்யப்பட்ட தேசியக்கொடி, வீடுகளை முழுமையாக சென்றடையாததால், பலர் ஏமாற்றமடைந்தனர்.
நாட்டின், 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், 13 முதல், 15 வரை, தேசியக்

கொடியை அனைத்து வீடுகளிலும் ஏற்ற, மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி ஓசூர் மாநகராட்சியில், 45 வார்டுகளில், 85 ஆயிரம் குடியிருப்புகளுக்கு தேசியக்கொடி வழங்கும் பணி கடந்த, 10ல் துவங்கியது. சில இடங்களில் இலவசமாகவும், மற்ற பகுதிகளில், 18 ரூபாய்க்கும் மாநகராட்சி மூலம் விற்கப்பட்டது. ரேஷன் கார்டுடன், வீட்டு வரி ரசீதை கொடுத்து,
தேசியக்கொடியை பெறலாம் என, மாநகராட்சி அறிவித்தது.
ஆனால், தொழில் நகரமான ஓசூரில், வாடகை வீட்டில் உள்ளோர் அதிகம். அரசின் அடுக்கு மாடி குடியிருப்பிலும் ஏராளமானோர் வசிக்கின்றனர். இவர்களில் பலரிடம் வீட்டு வரி ரசீது இல்லை. ஆனாலும், தங்கள் வீடுகளுக்கு தேசியக்கொடி வரும் என காத்திருந்தனர். மாநகராட்சி
நிர்வாகத்தால் நேற்று வரை முழுமையாக வினியோகிக்க முடியவில்லை. அதனால் பல இடங்களில் தேசியக்கொடியை எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியத்திடம்
கேட்டபோது, ''85 ஆயிரம் கொடியை, அனைத்து வீடுகளுக்கும் வினியோகம் செய்து முடித்து விட்டோம். ஏதாவது ஒன்று, இரண்டு விடுபட்டிருக்கும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • குறியீடு - ,

    இதிலும் விஞ்ஞான பூர்வமான ஊழல் நடைபெற்றதா,? இவ்வளவு கோடி யாருக்கு சென்றடைந்தது என்று கமிஷனர் சொல்வாரா

Advertisement