dinamalar telegram
Advertisement

நிதி ஒதுக்காமல் அலட்சியம்: 512 பள்ளிகளில் சத்துணவு கேள்விக்குறி?

சேலம் மாவட்டத்தில், ஆறு மாதமாக நிதி ஒதுக்காமல் அலட்சியம் காட்டுவ தால், 512 பள்ளிகளில், சத்துணவு வழங்குவது கேள்விக்குறியாகி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் வீரபாண்டி, 77, நங்கவள்ளி, 90, மேச்சேரி, 95, காடையாம்பட்டி, 117, கொங்கணாபுரம், 68, கெங்கவல்லி, 65 என ஆறு ஒன்றியங்களில், 512 சத்துணவு மையங்கள் உள்ளன.

சத்துணவு மையங்களுக்கு தேவையான காய்கறி, மளிகை பொருள் மற்றும் காஸ் சிலிண்டர் செலவினத்துக்காக, மூன்று மாதங்களுக்கு தேவையான நிதி, முன்ன
தாகவே, அமைப்பாளர் வங்கி கணக்கில், மொத்தமாக வரவு வைக்கப்பட வேண்டும். ஆனால், இந்த ஆறு ஒன்றியத்துக்கு மட்டும் தேவையான நிதி, ஆறு மாதமாக ஒதுக்கீடு செய்யாததால், கடும் நிதி நெருக்கடியில் தவிப்பதாக, சத்துணவு அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சில சத்துணவு அமைப்பாளர்கள் கூறியதாவது: சத்துணவு அமைப்பாளர் பற்றாக்குறையால், 4-5 பள்ளி மையங்கள் வரை, ஒரே அமைப்பாளர் நிர்வகிக்கும் நிலையும் உள்ளது. கூடுதல் பணிப்பளுவை கூட, நாங்கள் பொருட்படுத்துவது கிடையாது.
சத்துணவுக்கான நிதியை வழங்காமல், ஏப்., முதல், அதிகாரிகள் காட்டும் அலட்சியம், மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. நான்கைந்து பள்ளிக்கு சேர்ந்து வாங்கிய, மளிகை பொருட்களின் கடன் தொகை, ஒரு லட்ச ரூபாயை தாண்டியுள்ளது. இதனால் கடையில், மளிகை பொருள் தர தயக்கம் காட்டுகின்றனர். அதனால் காய்கறியும், அளவு குறைத்து வாங்க வேண்டி உள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுபற்றி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கலைச்செல்வி கூறுகையில், 'இன்னும்
ஒருவாரத்தில், நிதி ஒதுக்கீடு செய்யப்படும்' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement