dinamalar telegram
Advertisement

போதை விற்பனையை தடுக்க முடியல நகராட்சி சேர்மன் பேச்சால் அதிர்ச்சி

''போதை பொருட்கள் விற்பனையை தடுக்க முயன்றால், என்னை பதவியில் இருந்து நீக்க முயற்சிக்கின்றனர், என்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை,'' என்று குமாரபாளையம் நகராட்சி சுயேச்சை சேர்மன் விஜய்கண்ணன், சுதந்திர தினவிழாவில் பேசியது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி அலுவலக வளாகத்தில், நேற்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. சுயேச்சை சேர்மன் விஜய் கண்ணன் தேசியக்கொடி ஏற்றி, சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவரது வாரிசு களை கவுரவித்தார். பின் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

குமாரபாளையத்தில் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இதை தடுக்க சென்றால், என்னை செயல்பட விடாமல் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். என்னை பதவியில் இருந்து நீக்க முயற்சிக்கின்றனர். அனைவருக்கும் உதவி செய்யவே, இந்த பதவிக்கு வந்தேன். பணம் சம்பாதிக்க அல்ல. இந்த விஷயத்தில் என்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. இவ்வாறு சேர்மன் பேசினார்.
நகராட்சி கமிஷனர் விஜயகுமார், துணை சேர்மன் வெங்கடேசன், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்ற அரசு விழாவில், சுயேச்சை சேர்மனின் வெளிப்
படையான பேச்சு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'போதை பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும்' என்று, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால், நகராட்சி சேர்மன், போதை பொருள் விற்பனை தடுப்பில், சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்று பேசியுள்ளது, மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement