dinamalar telegram
Advertisement

தியாகிகள், வீரர்களின் வரலாறுகளை இணையதளத்தில் பதிவேற்றணும்

சுதந்திர போராட்ட தியாகிகள், ராணுவ வீரர்கள் மற்றும் தமிழர்களின் கல்வெட்டு, சிற்பம் குறித்து மாவட்டம் தோறும் சேகரித்து, தமிழக அரசின் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என, ஆத்துாரில், பாரத் சம உடமை கட்சி பொதுச் செயலர் பேசினார்.
சேலம் மாவட்டம் ஆத்துார், காந்தி நகரில், பாரத் சம உடமை கட்சி, மாநில அலுவலகம் முன், கட்சி பொது செயலர் பழனி ராமச்சந்திரன், நேற்று தேசியக்கொடி ஏற்றி, கட்சி கொள்கைகளை உறுதிமொழி எடுத்தனர். என்.சி.சி., மாணவர்களை, கவுரவித்தார். தொடர்ந்து ஆத்துார், காந்தி நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில், அவர் பேசியதாவது:

தேச பக்தி என்பது, செயலாகவும், பேச்சாகவும் மட்டும் இருந்தால் போதாது; நமது உயிர் மூச்சாக இருக்க வேண்டும். இன்றுள்ள இளைஞர்கள், சுதந்திரத்தை அனுபவிப்பதால், தியாகிகள் பட்ட துயரம் தெரியாது. சுதந்திர போராட்டத்தின்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் பங்கேற்ற தியாகிகள். அவர்களது புகைப்படம், சாதனைகள், முக்கிய நிகழ்வு, வீரதீர செயல் புரிந்த ராணுவ வீரர்கள் குறித்த பதிவுகளை, அரசின் இணையதளத்தில் பதிவிட வேண்டும். தேசப்பற்றுள்ள இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் வாயிலாக, ஒவ்வொரு இந்திய குடிமகனும், நாட்டுக்கு சேவையாற்றிய மனநிறைவை பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.
மாநில தலைவர் ஆறுமுகம், மாநில அமைப்பு செயலர் ஜெகதீசன், பொருளாளர் ரவிசங்கர் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement