dinamalar telegram
Advertisement

ஏற்காடு ஏரியில் கழிவுநீர் கலப்பு கிராமசபையில் கேள்வியால் சலசலப்பு

சுதந்திர தினத்தையொட்டி, ஏற்காடு ஊராட்சி கிராமசபை கூட்டம், தலைவர் சிவசக்தி தலைமையில், ஏற்காடு காந்தி பூங்காவில் நேற்று நடந்தது.
தி.மு.க.,வை சேர்ந்த செந்தில், ''ஊராட்சி மன்ற அலுவலகம் வழியாக ஓடும் கழிவு நீர், அலங்கார ஏரியில் கலக்கிறது. இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?,'' என்று கேள்வி எழுப்பினார். ''அதற்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் சொல்லித்தான் செய்யவேண்டும் என்பதில்லை,'' என்று தலைவர் பதில் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.,வினர் தலைவருடன் வாக்குவாதம் செய்தனர்.

இதைப்பார்த்து உறுப்பினர்கள் மற்றும் அ.தி.மு.க.,வினர் தி.மு.க.,வினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வாக்குவாதத்தை தடுத்து நிறுத்தினர்.
ஏற்காட்டில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்தி, உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்காட்டில் கழிப்பறை வசதி செய்ய வேண்டும். ஏற்காடு காந்தி பூங்காவில் குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் அமைத்து பராமரிக்க வேண்டும். கொடிக்காடு கிராமத்துக்கான நடைபாதையை, தனியார் தோட்ட உரிமையாளர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement