dinamalar telegram
Advertisement

உற்சாகத்துடன் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

நாடு முழுவதும், 75வது சுதந்திர தினவிழா, நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சேலம் காந்தி மைதானத்தில், கலெக்டர் கார்மேகம் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார். தொடர்ந்து, மூவர்ண பலுான்களை பறக்க விட்டார்.
பல்வேறு துறைகள் சார்பில், 33 பயனாளிகளுக்கு, 57.19 லட்ச ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய, 41 அலுவலர், 37 மாநகர போலீசார், 29 மாவட்ட போலீசார், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் உள்பட, 145 பேருக்கு, நற்சான்றிதழ் வழங்கப்பட்டன. அதன்பின், மொழிப்போர் தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில், தேசபக்தி, இயற்கையை பாதுகாப்போம் உள்ளிட்ட கருத்தை வெளிப்படுத்தும் விதமாக அரங்கேறிய கலை நிகழ்ச்சிகள், பார்வையாளர்களை ரசிக்க வைத்தன. அத்துடன் இணைந்து நடந்த கரகாட்டம், ஒயிலாட்டம், மலைவாழ் மக்கள் நடனம் கவர்ந்தது.
மாநகராட்சியில்...
சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், துணைமேயர் சாரதாதேவி தேசிய கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேயர் ராமச்சந்திரன், கமிஷனர் கிறிஸ்துராஜ், சென்னையில் நடந்த சுதந்திர தினவிழாவில் பங்கேற்று, சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டதற்கான முதல்வர் விருதை பெற்றதால், அவர்களால் பங்கேற்க முடியவில்லை.
ஆத்துாரில்...
நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்தில், தலைவர் அலெக்சாண்டர் தேசியக்கொடியேற்றி இனிப்பு வழங்கினார். ஆத்துார் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் நிர்மலா பபிதா, தேசியக் கொடி ஏற்றினார். வீரகனுார் போலீஸ் ஸ்டேஷனில், சொக்கனுார் பசுமை இந்தியா இயக்கம் சார்பில், மரக்கன்று வழங்கப்பட்டது. இதேபோல் ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம் பகுதி கோவில்களில் பொது விருந்து நடந்தது.
இடைப்பாடியில்...
இடைப்பாடி நகராட்சி அலுவலகத்தில், தலைவர் பாஷா தேசியக்கொடி ஏற்றினார். கொங்கணாபுரம் ஒன்றிய அலுவலகத்தில், சேர்மன் மணி, இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியர் பிரபு, இடைப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் கொடியேற்றினர்.
பனமரத்துப்பட்டியில்...
சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் தேசிய கொடியேற்றினார்.
பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையாளர் சீனிவாசன், பி.டி.ஓ.,விஜயலட்சுமி கொடியேற்றி மரியாதை செலுத்தினர்.
குரால்நத்தம் அரசுப்பள்ளியில், 75 வடிவத்தில் மாணவ, மாணவியர் அமர்ந்து, தேசப்பற்றை வெளிப்படுத்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement