Advertisement

உலக தடகள போட்டியில் வெற்றி நங்கவள்ளி ஏட்டுக்கு பாராட்டு

போலீசார் உலக தடகள போட்டியில் வெற்றி பெற்ற, நங்கவள்ளி ஏட்டுவை, கிராம மக்கள் ஊர்வலமாக அழைத்து சென்று பாராட்டினர்.
நெதர்லாந்து நாட்டில் போலீசாருக்கான உலக தடகள போட்டி, கடந்த ஜூலை மாதம் நடந்தது. இதில் சேலம் மாவட்டம் நங்கவள்ளி போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு சுரேஷ்குமார், 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் தங்க பதக்கம், மும்முறை நீளம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் பெற்றார். இவரை முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார்.
இந்நிலையில் சுரேஷ்குமாரை, அவரது சொந்த ஊரான பாகல்பட்டியை சேர்ந்த கிராம மக்கள், நேற்று ஊர்வலமாக அழைத்து வந்து பாராட்டு விழா நடத்தினர். இதில் ஓமலுார் இன்ஸ்பெக்டர் வெங்கடேச பெருமாளும் பங்கேற்றார்.
சுரேஷ்குமாரின் மனைவி பாப்பா, தலைமை காவலராக சேலம் எஸ்.பி., அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement