dinamalar telegram
Advertisement

தெற்குகாடு பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பில் தாமதம்

ஆத்துார் அருகே நரசிங்கபுரம் நகராட்சியில், பொன்னி கூட்டுறவு ரேஷன்கடை உள்ளது. இதன் கட்டுப்பாடில், 1,009 ரேஷன்கார்டு இருப்பதால், அத்யாவசிய பொருட்களை மொத்தமாக இருப்பு வைப்பதிலும், வினியோகம் செய்வதிலும், இடையூறு ஏற்படுகிறது. நுகர்வோரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதை தவிர்க்க பொன்னி ரேஷன்கடையில் இருந்து, 200 ரேஷன் கார்டுகளை பிரித்து, தெற்குகாடு பகுதியில் பகுதி நேர ரேஷன்கடை திறக்க, மே மாதம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதுவரை ரேஷன்கடை திறக்கப்படவில்லை.
இதேநாளில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட, இடைப்பாடி, ஏ.பி., பொன்னி கூட்டுறவு கடையில் இருந்து பிரித்து, மோட்டூரில் பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டு விட்டது. தெற்குகாடு பகுதியில், ரேஷன் கடை திறக்க தாமதம் ஏற்படுவதற்கான காரணம் தெரியவில்லை. இதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய, கூட்டுறவு சார்பதிவாளர் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement