dinamalar telegram
Advertisement

கிராமசபை கூட்டத்தில் 4வது முறையாக பள்ளியை தரம் உயர்த்தக்கோரி தீர்மானம்

காங்கேயம் அருகே, அரசுப்பள்ளியை தரம் உயர்த்தக்கோரி, கிராமசபை கூட்டத்தில், நான்காவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாட்டின், 75வது சுதந்திர தினத்தையொட்டி, காங்கேயம் யூனியன் பழையகோட்டை ஊராட்சி, கிராமசபை கூட்டம் தலைவர் மீனாட்சி தலைமையில் நேற்று நடந்தது. மேற்பார்வையளராக ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து பேபி கலந்து கொண்டார்.

ஊராட்சி மன்ற உறுப்பினரும், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினருமான ரஞ்சிதம், பழையகோட்டை புதுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை, உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். ஏற்கனவே இதுகுறித்து மூன்று கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மக்கள் சார்பிலும் உயர் நிலைப்பள்ளிக்கான பங்களிப்பு தொகை ரூபாய் ஒரு லட்சம் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், தரம் உயர்த்தும் அறிவிப்பு இதுவரை வரவில்லை. இதனால் பள்ளி மாணவ, மாணவியர் வெகுவாக பாதிக்கின்றனர். பலர் படிப்பை பாதியில் நிறுத்துகின்றனர்.
நடப்பு கல்வியாண்டிலாவது பள்ளியை தரம் உயர்த்த, பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிடவேண்டும் என்று, கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்கள் வலியுறுத்தினர். இத்தீர்மானம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், 2௦௦க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement