dinamalar telegram
Advertisement

காவிரியில் குளித்த ஐ.டி., ஊழியர் உள்பட 2 பேர் தண்ணீரில் மாயம்

வாங்கல் அருகே, கடம்பன் குறிச்சியில் குளிப்பதற்காக காவிரி ஆற்றில் இறங்கிய, ஐ.டி., நிறுவன ஊழியர் உட்பட, 2 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே, கொளத்துாரை சேர்ந்தவர் திவாகர், 25; இவர், வாங்கல் அருகே, கடம்பன்குறிச்சியில் உள்ள குலதெய்வ கோவிலில் கிடா விருந்து வைத்திருந்தார். இவரது நண்பர்களான கோவை தொண்டாமுத்துாரை சேர்ந்த, ஐ.டி., நிறுவன ஊழியர் விஷ்ணு, 25, ஒண்டி

புதுாரை சேர்ந்த ஆதர்ஷ், 25, கோவையை சேர்ந்த சங்கர், நவீன்குமார், அஜித் ஆகிய, 5 பேர் வந்துள்ளனர்.
இவர்கள், நேற்று காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர். காவிரி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்லும் நிலையில், ஆழமான பகுதியில் முதலில் இறங்கிய ஆதர்ஷை தண்ணீர் இழுத்து சென்றது. அதை கண்ட விஷ்ணு அவரை காப்பாற்ற ஆற்றுக்குள் இறங்கியபோது அவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினர், நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் சம்பவ இடத்துக்கு சென்று இருவரையும் தேடி வருகின்றனர்.
மேலும், இதுகுறித்து வாங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement