dinamalar telegram
Advertisement

மஹா மாரியம்மன் கோவிலில் பெண்கள் 1,650 திருவிளக்கு பூஜை

குளித்தலை அடுத்த, தோகைமலை பஞ்., வெள்ளப்பட்டியில் அமைந்துள்ள மஹா மாரியம்மன் கோவிலில், 18ம் ஆண்டு திருவிழாவையொட்டி, பெண்கள், 1,650 திருவிளக்கு பூஜை நடத்தினர். ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் இத்திருவிளக்கு பூஜை நடைபெறும்.
நேற்று முன்தினம், திருவிளக்கு பூஜை தொடங்கியது. இதில் பூஜைக்கு வந்த பெண்கள் ஐந்துமுக பித்தளை குத்துவிளக்குகளை கொண்டு வந்திருந்தனர். பூஜைபொருட்கள் அனைத்தும் விழாக்குழுவினர்களால் வழங்கப்பட்டு, 4 கட்டமாக பூஜை நடந்தது.

இத்திருவிளக்கு பூஜையின் சிறப்பு அம்சமாக, 1,650 பெண் பக்தர்கள் விளக்கேற்றி மழை வேண்டுதல், வறுமையை ஒழித்தல், குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துதல், தொழில், கல்வியில் சிறந்து விளங்குதல், சமூக ஒற்றுமை, உறவினர்கள் ஒற்றுமை, மாங்கல்யம் நீடித்திருத்தல் என, வரம் கேட்டு குங்குமம், துளசி, மலர், மஞ்சள், தானியம் போன்ற பொருட்களை துாவி வழிபட்டனர்.
பின், சிறப்பு அலங்காரம் செய்த மஹா மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து ஐம்பொருள் அன்னதான பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இப்பூஜையில் தோகைமலை யூனியனுக்கு ட்பட்ட பஞ்., பகுதியிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement