dinamalar telegram
Advertisement

அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கல்

அரவக்குறிச்சி அடுத்து, மோளையாண்டிபட்டி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, மக்கள் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நாட்டின், 75வது சுதந்திர தின விழாவையொட்டி, மோளையாண்டிபட்டி நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, தனித்திறன்களை மேம்படுத்தும் வகையில் கேரம் போர்டு, செஸ் போர்டு, ஸ்கிப்பிங் கயிறு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்களை வழங்கினர்.
விழாவில், சுதந்திர தின கருத்துக்களை எடுத்துரைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், சமூக உரிமை பாதுகாப்பு படை மாநில செயலாளர் கார்த்திகேயன், மக்கள் உரிமை பாதுகாப்பு கழக நிர்வாகிகள் வைரமுத்து, சுப்பிரமணி, முத்துராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement