dinamalar telegram
Advertisement

மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் பால்குட ஊர்வலம்

குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் பஞ்., தேவேந்திர குல தெருவில் மாரியம்மன், காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம், பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ராஜேந்திரம் காவிரி ஆற்றிலிருந்து, பால்குடம், தீர்த்த குடம் எடுத்து, ராஜேந்திரம் ஏகிரியம்மன், மலையாள சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, முக்கிய வீதி வழியாக பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.

தொடர்ந்து, மாரியம்மன், காளியம்மன் கோவிலில் பக்தர்கள் கொண்டு வந்த பால்குடம், தீர்த்த நீரை சுவாமிக்கு ஊற்றி சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்தனர்.
விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மதியம் சந்தன காப்பு அலங்காரமும், மாலை மாவிளக்கு எடுத்து அபிஷேக ஆராதனையும் நடந்தது. இரவு கலை நிகழ்ச்சி மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement