dinamalar telegram
Advertisement

கிராம சபையில் பஞ்., துணை தலைவர் ஆபாச பேச்சு காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட அதிகாரியால் பரபரப்பு

கிராம சபை கூட்டத்தில், பஞ்., துணை தலைவர் ஆபாசமாக பேசிய நிலையில், பொதுமக்களின் காலில் விழுந்து, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மன்னிப்பு கேட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோடந்துார் பஞ்.,ல், கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், பஞ்., தலைவர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார்.

அங்கு, பஞ்சாயத்தில் நடந்த நிதி மற்றும் ஊழல் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் கேள்வி கேட்க தொடங்கினர். குறிப்பாக, ராஜாமணி என்பவர், 'இறப்பு சான்றிதழ் கூட வழங்க வக்கு இல்ல; எத்தன தடவை கேட்டாலும் கொடுக்க மாட்றாங்க' என, பேசினார். அப்போது பொங்கி எழுந்த பஞ்., துணை தலைவர் தங்கராஜ், 'நீ என்ன பெரிய கலெக்டரா' எனக்கூறி, கேள்வி கேட்டவரை, ஆபாச வார்த்தையில் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். அங்கிருந்தவர்கள், இரண்டு பேரையும் சமாதானப்படுத்தினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து, அப்பகுதியை சேர்ந்த மெய்ஞானமூர்த்தி என்பவர் பேசுகையில், ''சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் பஞ்., தலைவர் உமா மகேஸ்வரி மீது, தமிழ்நாடு ஊராட்சி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பஞ்., வார்டு உறுப்பினர்கள், 7 பேர், கலெக்டருக்கு கடிதம் கொடுத்துள்ளனர். இதுகுறித்த உண்மை நிலவரத்தை, பஞ்., தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் விளக்க வேண்டும்,'' என்றார்.
அப்போது, க.பரமத்தி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சேது, பொதுமக்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.
அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தவறு செய்த பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணை தலைவருக்காக, ஏன் வட்டார வளர்ச்சி அலுவலர் பொதுமக்கள் காலில் விழ வேண்டும் என, பொதுமக்கள் கேள்வி கேட்டு கலைந்து சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement