dinamalar telegram
Advertisement

சைக்கிள் மீது டிராவல்ஸ் வேன் மோதி விபத்து: முதியவர் பலி

குளித்தலை அடுத்த, பாப்பக்காபட்டி பஞ்., ஆ.புதுப்பட்டியை சேர்ந்தவர் நடராஜன், 61. நேற்று முன்தினம், குப்பாச்சிப்பட்டியில் சாலையோரமாக சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, வீரப்பூர் கோவிலுக்கு சென்றுவிட்டு, சேலத்துக்கு சென்றுகொண்டிருந்த டிராவல்ஸ் வேன், மணப்பாறை-குளித்தலை நெடுஞ்சாலை, குப்பாச்சிபட்டி பஸ் நிறுத்தம் அருகே, சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், முதியவர் படுகாயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைகு சேர்த்தனர். மேல் சிகிக்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், நடராஜன் உயிரிழந்தார்.
இதுகுறித்து, குளித்தலை போலீசார், சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகா, காளி கவுண்டம்பாளையத்தை சேர்ந்த டிராவல்ஸ்
வேன் டிரைவர் சின்னையன், 39, என்பவர் மீது, வழக்குப்பதிவு செய்து
விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement