dinamalar telegram
Advertisement

நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாட்டம் ரூ.1.01 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி

கரூர் மாவட்ட விளையாட்டரங்கில், நாட்டின், 75வது சுதந்திர தின விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில், கலெக்டர் பிரபுசங்கர்,
தேசியக்கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை

ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த, 405 நபர்களை பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து, 59 பேருக்கு, 1.01 கோடி ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின், மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
விழாவில், டி.ஆர்.ஓ., லியாகத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், டி.ஆர்.ஓ., கவிதா, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதல்வர் முத்துச்செல்வன், ஆர்.டி.ஓ.,க்கள் ரூபினா, புஷ்பாதேவி, மாவட்ட வழங்கல் அலுவலர் தட்சிணாமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
* கரூர் மாநகராட்சி அலுவலகத்தில், மேயர் கவிதா, தேசியக்கொடியை ஏற்றி வைத்து மாரியாதை செலுத்தினார்.
* கரூர் நகர கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் பிருந்த தேவி, வங்கி தலைவர் திருவிகா, ஆகியோர் தேசியக்கொடி ஏற்றி வைத்து, இனிப்புகள் வழங்கினர்.
* கரூர் தான்தோன்றிமலையில், கவுண்டம்பாளையம் தொடக்கப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். பின், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை, தலைமை ஆசிரியர் பரணிதரன் செய்திருந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement