காட்டுப்பன்றி இறைச்சி விற்றவருக்கு அபராதம்
செங்கம் : செங்கம் அருகே, காட்டுப்பன்றி இறைச்சி விற்றவருக்கு, 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், பிஞ்சூர் காப்புக்காட்டில், வன விலங்குகள் வேட்டையாடி விற்பனை செய்யப்படுவதாக, செங்கம் வனத்துறையினருக்கு புகார் சென்றது.அப்பகுதியில் செங்கம் வனத்துறையினர் நேற்று காலை ரோந்து சென்றனர். பனை ஓலைப்பாடியை சேர்ந்த மணி, 35, காட்டுப்பன்றியை வேட்டையாடி, 7 கிலோ இறைச்சி வைத்திருந்தது தெரியவந்தது.அதை பறிமுதல் செய்த வனத்துறையினர், 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!