dinamalar telegram
Advertisement

மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை போராட்டம் தொடரும்: எம்.பி., ஜோதிமணி

''வரும், 2024ல் மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை, காங்., கட்சியின் போராட்டம் தொடரும்,'' என, கரூர் காங்.,--எம்.பி., ஜோதிமணி கூறினார்.
கரூர் மாவட்ட காங்., கட்சி சார்பில், பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து, வாங்கப்பாளையம் முதல் வெங்கமேடு வரை பேரணி நடந்தது.

அதில், பங்கேற்ற, எம்.பி., ஜோதிமணி நிருபர்களிடம் கூறியதாவது:
நாட்டில் இரண்டாவது சுதந்திர போரை நடத்தும் அளவுக்கு, பிரதமர் மோடி ஆட்சியில் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. அம்பானி, அதானிக்கு வரி சலுகை தரும், பா.ஜ., அரசு ஏழை மக்களை வஞ்சிக்கிறது.
மோடி ஆட்சியை அகற்ற வரும் செப்., 7 முதல் எம்.பி., ராகுல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, 3,500 கிலோ மீட்டர் பாதயாத்திரை மேற்கொள்கிறார். இந்திய மக்களுக்கு தேச பக்தி, ரத்தத்தில் ஊறியுள்ளது. அதை பிரதமர் மோடி சொல்லித்தான், வர வேண்டும் என்பது இல்லை.
எட்டு ரூபாய் மதிப்புள்ள தேசிய கொடியை, 20 ரூபாய்க்கு விற்கின்றனர்.
மேலும், சீனாவில் இருந்து வரும் பாலியஸ்டர் துணியில் தான், தேசிய கொடியை தயாரிக்க வேண்டும்
என்கின்றனர். பா.ஜ.,-ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு
களுக்கு தேசிய கொடியை பற்றி பேச, எந்த உரிமையும் இல்லை. வரும், 2024ல் பிரதமர் மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை, காங்., கட்சியின் போராட்டம்
தொடரும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Gopalakrishnan S -

    தேசிய கொடியை நீங்கள்தான் குத்தகைக்கு எடுத்து உள்ளீர்களா ?

Advertisement