dinamalar telegram
Advertisement

ஜவுளிப்பூங்கா அமைக்க விண்ணப்பிக்க அழைப்பு

'சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்க, தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம்' என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு-:

தமிழ்நாட்டிலுள்ள ஜவுளி மையங்களில், ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோருக்கு, 2.50 கோடி ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. இதில், குறைந்தபட்சம், 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம், 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.
தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப்பயன்பாட்டுக்கான கட்டடங்கள்) 50 சதவீதம் அல்லது, 2.50 கோடி ரூபாய், இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக
வழங்கப்படுகிறது.
தற்போது, தொழில் முனைவோரின் கோரிக்கையை தொடர்ந்து, தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில், ஜவுளி தொழிற்
கூடங்கள் அமைப்பதற்கான கட்டடங்களையும் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், விபரங்களுக்கு தொடர்புகொள்ளவேண்டிய முகவரி, துணிநுால் துறை, மண்டல துணை இயக்குனர் அலுவலகம், 30/3, நவலடியான் காம்ப்ளக்ஸ், முதல் தளம், தான்தோன்றிமலை, கரூர் மற்றும் மொபைல் எண்கள், 94446-56445, 90925-90486 என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement