dinamalar telegram
Advertisement

2 பஸ் ஸ்டாண்டுக்கு முதல்வர் அடிக்கல் அமைச்சர் முத்துசாமி தகவல்

ஈரோட்டில் இரு புது பஸ் ஸ்டாண்டுகளுக்கு, முதல்வர் அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைக்க உள்ளதாக, அமைச்சர் முத்துசாமி
தெரிவித்தார்.

ஈரோட்டில் அவர் நேற்று கூறியதாவது:
முதல்வர் ஸ்டாலின், 25, 26 தேதிகளில், ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 25ம் தேதி மாலை, டி.என்.பாளையம் ஒன்றியம் கள்ளிபட்டியில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.
குன்னத்துார், கோபி வழியே கள்ளிப்பட்டி சென்று சிலையை திறந்த பின்
அத்தாணி, ஆப்பக்கூடல், பவானி, காலிங்கராயன்பாளையம், அக்ரஹாரம், ஈரோடு பஸ் ஸ்டாண்ட் வழியே காலிங்கராயன் விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். இரவு அங்கு தங்குகிறார்.
26ம் தேதி காலை, 9:00 மணிக்கு சோலார் பஸ் ஸ்டாண்ட்டில் அமைக்கப்பட்ட, விழா மேடைக்கு செல்கிறார். அங்கு நல திட்ட உதவிகளை வழங்குகிறார். சோலார் பஸ் ஸ்டாண்டுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
சத்தி சாலையில் கூடுதல் பஸ் ஸ்டாண்ட் அமைக்கவும் ஏற்பாடு உள்ளது. சிலை திறப்பு விழாவில் தி.மு.க.,வினர் அதிகம் வர ஏற்பாடு செய்துள்ளோம். மக்களும் பங்கேற்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement