dinamalar telegram
Advertisement

ஆண்டுக்கு ரூ.97 ஆயிரம் கோடி வட்டி தமிழக அரசு மீது அன்புமணி சாடல்

''தமிழக அரசு ஆண்டுக்கு, 97 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கட்டி வருகிறது,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பினார்.
பா.ம.க., தலைவரும், எம்.பி.,யுமான அன்புமணி, ஈரோட்டில் நேற்று கூறியதாவது: நாட்டின், 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். ஆனாலும் வறுமை, மது, சூது, போதை, குடிநீர் போன்ற பிரச்னையில் இருந்து, இன்னமும் விடுதலை கிடைக்கவில்லை. சமூக நீதி முழுமையாக மக்களுக்கு கிடைக்கவில்லை. இந்த, 75 ஆண்டுகளில் தமிழகத்தில், 55 ஆண்டு காலம் திராவிட ஆட்சி நடந்துள்ளது.

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யவும் அறிவிப்பு வரவேண்டும். போதை பழக்கத்துக்கு எதிராக ஒரு செயல் திட்டத்தை வெளியிட மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த அறிவிப்பை, சுதந்திர தின விழாவில் முதல்வர் வெளியிடுவார் என நான் நம்புகிறேன். காவிரி ஆற்றில் கடந்த, 28 நாட்களாக, 151 டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலந்துள்ளது. திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி கொள்பவர்கள் இதற்காக என்ன செய்தார்கள்.
காவிரியில் குறைந்தது, 50 தடுப்பணை கட்ட வேண்டும். இதன் மூலம், 70 டி.எம்.சி., தண்ணீரை நாம் சேகரிக்க முடியும். இந்தியாவில் கல்வி, சுகாதாரம், வேளாண் இடுபொருள் சம்பந்தமான இலவசங்கள் வேண்டும். ஓட்டுக்கான இலவசம் வேண்டாம். தமிழகத்தில் இன்று, 11 லட்சத்து, 68 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இதில் நேரடியாக அரசுக்கு, 6.43 லட்சம் கோடி உள்ளது. இதற்காக தமிழக அரசு ஆண்டுக்கு, 97 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கட்டி வருகிறது. தி.மு.க.,வினர் தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு, தேர்தலுக்கு பிறகு மற்றொரு பேச்சு பேசுகின்றனர். நீட் தேர்வால் அதிக தற்கொலைகள் நடக்கிறது. இதற்கு பெற்றோர்களும் ஒரு வகையில் காரணமாக உள்ளனர். இவ்வாறு அன்புமணி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement