dinamalar telegram
Advertisement

காவிரி ரயில்வே பாலத்தில் பாதுகாப்பு

சுதந்திர தினத்தை ஒட்டி, ஈரோடு காவிரி ரயில்வே பாலத்தில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாட்டின், 75வது சுதந்திர தின விழா, இன்று கொண்டாடப்படுகிறது. அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், பயணிகளின் உடமை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. ரயில்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ஈரோட்டை அடுத்த காவிரி ரயில்வே பாலத்தில், ஈரோடு ரயில்வே போலீசார் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியை நேற்று துவங்கினார். நாளை காலை வரை பாதுகாப்பு பணியில்
ஈடுபடுவர். இதேபோல் பஸ் ஸ்டாண்ட், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், போலீஸ் பாதுகாப்பு பலப்
படுத்தப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement