dinamalar telegram
Advertisement

வ.உ.சி., பூங்காவில் சுதந்திர தின விழா

சுதந்திர தின விழாவையொட்டி, ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில், கலெக்டர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்த உள்ளார்.
இந்தியாவின், 75வது சுதந்திர தின விழா, இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஈரோடு வ.உ.சி., மைதானத்தில், சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. காலை, 9:05 மணிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார்.
பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்படுகிறது. பள்ளி கல்வி துறையை சேர்ந்த, 10 பேருக்கு நற்சான்றிதழ் வழங்குகிறார்.
இதை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி, 9:55 மணிக்கு நாட்டு பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை டி.ஆர்.ஓ. தலைமையில் வருவாய் துறையினர் செய்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement