dinamalar telegram
Advertisement

ரஜினி விழித்துக்கொள்ள வேண்டும் ம.நே.ம., கட்சி நிர்வாகி எச்சரிக்கை

''நடிகர் ரஜினிகாந்த் விழித்துக்கொள்ள வேண்டும்,'' என, மனித நேய மக்கள் கட்சியின், மாநில பொது செயலாளர் அப்துல் சமது கூறினார்.
கோபியில் இலவச இ-சேவை மையத்தை, மனித நேய மக்கள் கட்சி, மாநில பொது செயலாளர் அப்துல் சமது நேற்று துவக்கி வைத்தார். பின், அவர் கூறியதாவது:

அமைதி பூங்காவான தமிழகத்தில், வன்முறையை கையில் எடுத்து, தங்கள் வளர்ச்சிக்காக பா.ஜ.,வினர் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு இதுபோன்ற வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் போதை பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து, இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும், பேராபத்து சூழ்ந்துள்ளது. பள்ளி மற்றும் கல்லுாரிகள், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. போதை வஸ்த்துகளின் நடமாட்டத்தை, போலீசார் மூலம் ஒடுக்க வேண்டும்.
போதை பொருட்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும். பா.ஜ., அரசியல் செய்யவும், அக்கட்சியை வளர்க்கும் சூழல் இல்லை என்ற சூழலால், குறுக்கு வழியில் ஆட்சியை நடத்த, தமிழக கவர்னரை பயன்படுத்துகின்றனர். இது அரசுக்கு எதிரான நடவடிக்கையாக கருதப்படும்.
சட்டத்தின் அடிப்படையில் கவர்னர் செயல்பட வேண்டும். தமிழகத்தில் கால் ஊன்ற, ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்காதா, என பா.ஜ.,வினர் துடித்து கொண்டுள்ளனர். எப்படியாவது நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு கொண்டு வந்து, அவர் தோள் மீதேறி, தமிழகத்தை ஆட்சி செய்ய முடியுமா என முன்பு துடித்தனர். அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டார்.
தற்போது கவர்னர் மூலம், நடிகர் ரஜினிகாந்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு சில தொகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் பா.ஜ.,வினர் ஈடுபட்டுள்ளனர். எனவே, நடிகர் ரஜினிகாந்த் விழித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement