dinamalar telegram
Advertisement

தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

தமிழக முதல்வர் ஸ்டாலின், ஈரோடு வரவுள்ள நிலையில், அதுகுறித்து விவாதிக்க, ஈரோடு வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க.,வினர் இணைந்த செயல்வீரர்கள் கூட்டம், மேட்டுக்கடையில் நேற்று நடந்தது.
தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் முன்னிலை வகித்தார். அந்தியூர் செல்வராஜ் எம்.பி., துவக்க உரையாற்றினார். ஈரோடு மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மேயர் நாகரத்தினம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், கவுன்சிலர் செந்தில்குமார், மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மாநில துணை பொது செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பங்கேற்கவில்லை. கூட்டத்தில், 900க்கும் அதிகமான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு, சிக்கன் பிரியாணி, காளான் பிரியாணி, சிக்கன் கிரேவி, தால்சா வழங்கப்பட்டது. அமைச்சர் முத்துசாமியும், நிர்வாகிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement