dinamalar telegram
Advertisement

ரூ.24 லட்சம் மதிப்பு பணிகளுக்கு பூஜை

பெருந்துறை ஒன்றிய குழு நிதி, 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய பணிகளுக்கு நேற்று பூஜை நடந்தது. சேர்மேன் சாந்தி ஜெயராஜ் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ஜெயகுமார், புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.
பட்டக்காரன்பாளையம் ஊராட்சி, பள்ளர் வழுவு பகுதியில், ஆறு லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை; ஆயிக்கவுண்டம்பாளையத்தில் ஆறு லட்சம் ரூபாய் மதிப்பில் வடிகால் அமைத்தல்; திங்களூர் ஊராட்சி, திங்களூர் நால்ரோடு பகுதியில் ஆறு லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைத்தல்; செல்லப்பம்பாளையம் ஊராட்சி செல்லப்பம்பாளையத்தில், ஆறு லட்சம் ரூபாய் மதிப்பில் வடிகால் அமைத்தல் ஆகிய பணிகளுக்கு பூஜை நடந்தது.
பெருந்துறை ஒன்றிய செயலாளர்கள் அருள்ஜோதி செல்வராஜ், ரஞ்சித்ராஜ், விஜயன் உட்பட பலர் கலந்துக்
கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement