dinamalar telegram
Advertisement

வத்தல்மலைக்கு பஸ்சில் பயணித்த அமைச்சர்கள்

தர்மபுரி வத்தல்மலையில், வத்தமலை, பால்சிலம்பு, நாயக்கனுார், ஒன்றிக்காடு உள்ளிட்ட, 8 மலைக்கிராமங்கள் உள்ளன.
அ.தி.மு.க., ஆட்சியில், தர்மபுரியிலிருந்து, வத்தல் மலைக்கு பஸ் சேவை துவங்கும் வகையில், தார்ச்சாலை அமைக்கப்பட்டது. ஆனால், சில மாதங்களில், பெய்த கன மழையால் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் வத்தல்மலைக்கு சென்று, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். அப்போது, தர்மபுரியி லிருந்து, வத்தல்மலைக்கு பஸ் இயக்கப்படும் என, உறுதியளித்தார். அதை தொடர்ந்து, வத்தல்மலை அடிவாரத்திலிருந்து, பால்சிலம்பு வரை சாலை சீரமைக்கப்பட்டது. இதையடுத்து, தர்மபுரி பஸ் ஸ்டாண்டிலிருந்து, நேற்று மாலை, 4:30 மணிக்கு வத்தல்மலைக்கு முதன் முறையாக அரசு பஸ் இயக்கப்பட்டது.

பஸ் சேவையை அமைச்சர்கள் பன்னீர்செல்வம், சக்கர பாணி, சிவசங்கர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்து, பொதுமக்களுடன், வத்தல்மலைக்கு அரசு பஸ்சில் பயணம் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement