dinamalar telegram
Advertisement

சேலம் சுதா மருத்துவமனைக்கு சீல்

சேலம் சுதா மருத்துவமனைக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.
ஈரோட்டில் சுதா மருத்துவமனை, 16 வயது சிறுமியிடம், சட்ட விரோதமாக எட்டுமுறை கருமுட்டை பெறப்பட்டது உறுதியானதால் அதே குற்றத்தில் ஈடுபட்ட இதர மருத்துவமனைகள் மீதும் நடவடிக்கை பாயும் என அமைச்சர் சுப்ரமணியம் அறிவித்தார். அதன்படி சேலம், புது பஸ் ஸ்டாண்ட் அருகே, பிருந்தாவன் சாலையில் உள்ள சுதா மருத்துவமனை, ஸ்கேன் சென்டர், கடந்த ஜூலை, 15ல் பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டது.

அத்துடன் மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்க, அப்போது மருத்துவ மனையில் தங்கியிருந்த, 6 நோயாளிகளை, வேறு மருத்துவமனைக்கு மாற்ற, 15 நாள் அவகாசம் வழங்கப்பட்டு, பின் அது, 30 நாளாக நீட்டிக்கப்பட்டது.
அவகாசம் நேற்றுடன் முடிந்ததும், சேலம் சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் நெடுமாறன், மதியம், 2:30 மணிக்கு சுதா மருத்துவமனைக்கு சென்றார். நோயாளி கள் இல்லை என்பதை உறுதி செய்த பின், மருத்துவ மனையை பூட்டி, 'சீல்' வைத்தார்.
இதுகுறித்து நெடுமாறன் கூறுகையில், ''உயர்மட்ட குழு ஆய்வில், 16 வயது சிறுமியிடம் கரு முட்டை எடுத்து வணிக ரீதியாக விற்பனை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
முதல் கட்டமாக, ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்தோம். தற்போது மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement