dinamalar telegram
Advertisement

தேசியக்கொடி தயாரிப்பு, விற்பனையில் முறைகேடு? கரூர் மாவட்ட அரசு அலுவலர்கள் கொந்தளிப்பு

தேசியக்கொடி தயாரிப்பு மற்றும் விற்பனையில், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கரூர் மாவட்ட நிர்வாக உத்தரவுப்படி, 3 லட்சம் தேசியக்கொடி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம், 1.50 லட்சம் கொடிகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
இங்கிருந்து அரசு பள்ளி ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்பு, அரசு அலுவலர்கள் ஆகியோரிடம் விற்பனை செய்யப்பட்டன. இதில், அரசு அலுவலக பணியாளர்கள், பள்ளி ஆசியர்கள் உட்பட பல அரசு அலுவலர்களிடம், 50 ரூபாய்க்கு ஒரு தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், உள்ளாட்சி அமைப்பு
களுக்கு, 20 முதல், 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஒரே கொடி, மூன்று விதமான விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது, அரசு வகுத்துள்ள விதிமுறைப்படி தயாரிக்காமல், நீளம், 1.5 அடி, உயரம், 1 அடியில் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், தையல் பணி சரியாக மேற்கொள்ளாமல், நுால்கள் பிரிந்து சேதமடைந்து காணப்படுகின்றன. சேதமடைந்துள்ள தேசியக்கொடியை ஏற்றக் கூடாது என்ற விதி உள்ளதால், இந்த கொடியை எப்படி ஏற்றுவது என, தெரியவில்லை.
ஆனால், தபால் நிலையத்தில், 25 ரூபாய்க்கு, அரசு விதிமுறைப்படி, நீளம், 3 அடி, உயரம், 2 அடியில் தரமான தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது. தேசியக்கொடியின் விலை
கூடுதல், குறைவு பற்றி நாங்கள் சிந்திக்க
வில்லை.
தயாரிப்பில் கூட நேர்மையாக செயல்படவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. மாவட்ட அதிகாரிகள் சிலர், தேசியக்கொடி தயாரிப்பு,
விற்பனையில் கூட நேர்மையாக செயல்படாமல் முறைகேட்டில் ஈடுபட்டனரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
இதுகுறித்து, கரூர் மாவட்ட மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், இணை இயக்குனர் வாணி ஈஸ்வரியிடம் கேட்டபோது, ''அந்தந்த துறை சார்பில் நிர்ணயம் செய்யப்பட்ட விலையிலேயே தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக, விலை நிர்ணயத்தில் வேறுபாடுகள் உள்ளன. மேலும், 1.50 லட்சம் கொடி மட்டுமே எங்களால் தயாரிக்க முடிந்ததால் மற்ற அரசு அலுவலகங்களில் வெளியில் வாங்கி கொண்டனர். கொடி விற்பனை செய்த தொகை, அந்தந்த மகளிர் சுய உதவி குழுக்களின் வங்கி கணக்கில் செலுத்தும்படி கூறிவிட்டோம். நாங்கள் எந்தவிதமான பண பரிமாற்றத்திலும் ஈடுபடவில்லை,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement