dinamalar telegram
Advertisement

பரமத்தியில் வேளாண்மை திட்டப்பணிகள் விதைச்சான்று இணை இயக்குனர் ஆய்வு

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டாரத்தில், வேளாண் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை, சென்னை விதைசான்று மற்றும் அங்கக சான்றளிப்புத்துறை வேளாண் இணை இயக்குனர் அசீர்கனகராஜன் நேற்று ஆய்வு செய்தார். மேல்சாத்தம்பூர் வருவாய் கிராமத்தில், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செய்த திட்டப்பணிகளை பார்வையிட்டார். வேளாண் துறையின் மூலம் வழங்கப்பட்ட திட்டப்பணிகளான பண்ணைக் கருவிகள், தென்னங்கன்றுகள், கைத்தெளிப்பான்கள், தார்ப்பாய்கள் வினியோகம் குறித்து விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.
பின் இருட்டணை வருவாய் கிராமத்தில் செயல்படுத்தப்படும், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தரிசு நிலத்தொகுப்பு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்த வேளாண் இணை இயக்குனர், அங்கிருந்த விவசாயிகளிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து, தோட்டக்கலைத்துறை சார்பில், விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை, இணை இயக்குனர் அசீர்கனகராஜன் வழங்கினார். ஆய்வின் போது, நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குனர், அசோகன், துணை இயக்குனர்கள் ராஜகோபால், முருகன், பரமத்தி வட்டார வேளாண் உதவி இயக்குனர் கோவிந்தசாமி, தோட்டக்லைத்துறை உதவி இயக்குனர் தமிழ்செல்வன் உள்பட பலர் உடன் சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement