dinamalar telegram
Advertisement

நம்ம நாமக்கல் உணவுத்திருவிழா

நாமக்கல் மாவட்ட நிர்வாகம், உணவு பாதுகாப்புத்துறை சார்பில், 'நம்ம நாமக்கல் உணவுத்திருவிழா' நாமக்கல்லில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., மல்லிகா தலைமை வகித்தார். உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அருண் வரவேற்றார். நாமக்கல் எம்.பி., சின்ராஜ், எம்.எல்.ஏ., ராமலிங்கம், நகராட்சி தலைவர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவை முன்னிட்டு, மாணவ, மாணவியருக்கு, பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

உணவு திருவிழாவை முன்னிட்டு, கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. அதில், அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, உணவு வகைகளை தயார் செய்து காட்சிப்படுத்தி இருந்தன. தயாரிக்கப்பட்ட உணவு வகைகள், பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்தா மருத்துவப்பிரிவு சார்பில், சித்த மூலிகை மருந்துகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மூலிகை மருந்துகளின் பயன்கள் குறித்து, டாக்டர் பூபதிராஜா, பொதுமக்களுக்கு விளக்கினார். விழாவை முன்னிட்டு, மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement