dinamalar telegram
Advertisement

போதை பொருட்களை ஒழிக்க போலீசார் வேனில் பிரசாரம்

குமாரபாளையத்தில் போலீசார் சார்பில் வேனில் நகர் முழுதும் போதை பொருள் ஒழிப்பு பிரசாரம் செய்யப்பட்டது.
தமிழக முதல்வரின் திட்டப்படி, போதை பொருட்களை ஒழிக்க மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, குமாரபாளையம் போலீசார் சார்பில், நகரப்பகுதி முழுவதும் வேன் மூலம், போதை பொருட்களை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. அப்போது குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி பேசியதாவது:

போதை பொருட்களான பான்மசாலா, குட்கா, கஞ்சா உள்ளிட்டவைகளை பயன்படுத்தி, உங்கள் உடல் நலத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது போதை பழக்கத்திற்கு ஆளாகி இருந்தாலும், போதை பொருட்கள் விற்பவர் யாராக இருந்தாலும், போலீசாருக்கு தெரியப்படுத்த வேண்டும். தகவல் தருபவர்கள் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரச்சாரத்தில் எஸ்.ஐ.. மலர்விழி, எஸ்.எஸ்.ஐ.,-க்கள் முருகேசன், மோகன், சிவகுமார், பெருமாள், ஏட்டுகள் ராம்குமார், ஆறுமுகம், சுகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement