முன்னாள் அ.தி.மு.க.,-- எம்.எல்.ஏ.,வின் வங்கி லாக்கரை திறந்து சோதனையிட முடிவு
அ.தி.மு.க.,வைச் சேர்ந்த நாமக்கல் முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கருக்கு சொந்தமான அவரது வீடு, அலுவலகம் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு, அலுவலகம் என, 26 இடங்களில், நேற்று முன்தினம், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில், வழக்கிற்கு தொடர்புடைய, 14 லட்சத்து, 96 ஆயிரத்து, 900 ரூபாய் மற்றும் 214 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த, 214 ஆவணங்களும், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் இரவு, பகலாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கரின் வங்கி லாக்கரை திறந்து சோதனையிடவும், லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!