dinamalar telegram
Advertisement

சிறப்பு பயிற்றுனர்களுக்கு சைகை மொழி பயிற்சி

மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி திட்டத்தின் கீழ், செவித்திறன் குன்றிய மாணவர்களுக்கு, கற்பிக்க, 5 நாள் சைகை மொழி பயிற்சி, நாமக்கல் மாவட்ட திட்ட அலுவகத்தில் நடந்தது. முதல் கட்ட பயிற்சி, ஜூலை, 25 முதல், 29 வரையிலும், இரண்டாம் கட்ட பயிற்சி, கடந்த, 8 முதல், நேற்று வரையும் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்து, துவக்கி வைத்தார். பயிற்சியில், 15 ஒன்றியத்தில் உள்ள சிறப்பு பயிற்றுனர்கள், இயன்முறை பயிற்றுனர்கள் மொத்தம், 71 பேர் பங்கேற்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள இந்திய சைகை மொழி பெயர்ப்பாளர்கள் சங்கம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
சைகை மொழி பயிற்சியானது, செவித்திறன் குன்றிய குழந்தைகளுக்கு, குடும்ப உறுப்பினர்களிடம் உரையாடல், பள்ளி மற்றும் பொது இடங்களில், தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது, சிறந்த முறையில் பள்ளி கல்வி மற்றும் உயர் கல்வி பெற உதவியாக உள்ளது. பயிற்சியின் கருத்தாளர்களாக, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ரிங்கு நாம்தேவ், மதுரையைச் சேர்ந்த தெரசா மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த நித்யா ஆகியோர் கலந்து கொண்டு, சைகை மொழி பயிற்சி அளித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement