dinamalar telegram
Advertisement

தேசிய கொடி ஏற்றுவதில் குழப்பம் விளைவித்தால் கடும் நடவடிக்கை

'தேசிய கொடி ஏற்றுவதில் குழப்பம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கலெக்டர் ஸ்ரேயா சிங் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

ஆக., 15ம் தேதி சுதந்திர தினத்தன்று, அனைத்து ஊராட்சிகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி தலைவர் ஆகியோர் மட்டுமே தேசிய கொடியை ஏற்றி, உரிய மரியாதை செலுத்த வேண்டும். அவர்களுக்கு பதிலாக வேறு எவரேனும் கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தாழ்த்தப்பட்ட வகுப்பினராக உள்ள ஊராட்சி தலைவர்கள், தேசிய கொடி ஏற்றுவதை தடுக்கும் விதமாக செயல்பட்டால், அவர்கள் மீது தீண்டாமை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், போலீசார் மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சிகளில், தேசியக்கொடி ஏற்றுவது தொடர்பாக பிரச்னைகள் இருந்தால், கலெக்டர் அலுவலக கட்டணமில்லா தொலைபேசி எண், 1077 அல்லது ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் மொபைல் எண், 74026 06854 ஆகியவற்றில் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement