dinamalar telegram
Advertisement

கரூர் கலெக்டர் இல்லத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை

நாட்டின், 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில், கரூர் கலெக்டர் பிரபுசங்கர் இல்லத்தில், தேசியக்கொடியை ஏற்றி வைத்து, குடும்பத்துடன் மரியாதை செலுத்தினார்.
அப்போது, அவர் கூறியதாவது:

மாவட்டம் முழுவதும், 3.30 லட்சத்துக்கு மேல் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அதை தவிர ஒவ்வொரு அரசு அலுவலகம், அனைத்து பள்ளி, கல்லுாரி மற்றும் நிறுவனங்கள், அனைத்து வீடுகளிளும் கிட்டத்தட்ட, 3.50 லட்சம் தேசியக்கொடியை ஏற்றி பறக்க விட உள்ளனர்.
அதற்கு தேவையான தேசியக்கொடி, நமது மாவட்டத்தை சேர்ந்த, 500 பேர் கொண்ட மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தயார் செய்யப்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பொது மக்களுக்கு தேசியக்கொடியை எப்படி ஏற்ற வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசியக்கொடியை ஏற்றி வைத்து பொதுமக்கள் அனைவரும் சுதந்திர தின விழாவை கொண்டாட வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement