dinamalar telegram
Advertisement

டெண்டர் விண்ணப்பம் தர மறுப்பு 16ல் பி.டி.ஓ., மீது விசாரணை

அரவக்குறிச்சி ஒன்றியத்தில், டெண்டருக்கு விண்ணப்பம் தர மறுத்த வட்டார வளர்ச்சி அலுவலர் மீது, வரும், 16ல் விசாரணை நடக்கிறது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட, 15வது நிதிக்குழு மானியத்தில், 10.80 லட்சம் ரூபாய் ஈசநத்தம் பஞ்., சுக்காம்பட்டியில் கழிவுநீர் கால்வாய், புங்கம்பட்டி மேற்கு ஊராட்சி ராமநாதபரத்தில் குடிநீர் இணைப்பு வழங்குதல் ஆகிய பணிகளுக்கு, ஜூலை, 22ல் டெண்டர் விடப்பட்டது. இதற்கான விண்ணப்ப படிவம், குறிப்பிட்ட நபருக்கு மட்டுமே வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் கலையரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மீது புகார் தெரிவித்து, சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குனருக்கு மனு அளித்திருந்தார். இதையடுத்து, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வரும், 16ல் விசாரணை நடத்த வேண்டும் என, கரூர் கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டு அனுப்பியுள்ளார்.
அதில், கூறப்பட்டுள்ளதாவது:
ஜூலை, 21ல் நடத்த ஒப்பந்த புள்ளிக்கு, 'செலுத்து சீட்டு (விண்ணப்பம்) தர வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தர மறுத்து விட்டார்' என, ஒன்றிய செயலாளர் கலையரசன் மற்றும் பெரியசாமி ஆகியோர் புகார் மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக வரும் வரும், 16ல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிவராமகிருஷ்ணராஜ் தலைமையில் விசாரணை நடக்கும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement